உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 நாள் குடிநீர் கட்

3 நாள் குடிநீர் கட்

சென்னை, ஆலந்துார் மண்டலத்தில், மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால், நாளை இரவு 9:00 மணி முதல் 24ம் தேதி இரவு 9:00 மணி வரை, குழாய் குடிநீர் நிறுத்தப்படும். மேலும், எம்.ஆர்.சி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், ராமபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்துார், மீனம்பாக்கம், நங்கநல்லுார், வேளச்சேரி, பொழிச்சலுார், கவுல் பஜார் ஆகிய இடங்களில், வீட்டு குழாய் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.inஇந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து குடிநீர் பெற்று கொள்ளலாம். இணைப்பு இல்லாத, அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு, 044- 4567 4567 இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ