உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : எழும்பூர் ரயில் நிலையத்தில் மூன்று கிலோ கஞ்சா மற்றும், 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் வந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது, ஒரு பெட்டியில் பேக் ஒன்று இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, மூன்று பெரிய பண்டல்கள் இருந்தன. அதில் மூன்று கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாயாகும். பறிமுதல் செய்த கஞ்சாவை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை சோதனை செய்தபோது 35 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு, 35 ஆயிரத்து 750 ரூபாயாகும். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ