புதரிலிருந்து 3 மாத குழந்தை மீட்பு
பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில், முதல் நடைமேடை அருகே உள்ள புதரில், நேற்று முன்தினம் இரவு, குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த, மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை மீட்டனர்.பெரம்பூர் போலீசார், அக்குழந்தையை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில், நேற்று ஒப்படைத்தனர்.