எஸ்.ஐ.,யாக நடித்து பணமோசடி தம்பதி உட்பட 3 பேருக்கு காப்பு
சென்னை:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 62 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 45; கார் ஓட்டுநர். அவருக்கு அறிமுகமான சிலர், காவல் துறையில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாயும், அவருக்கு தெரிந்த 19 பேரிடம் இருந்து, 57 லட்சம் ரூபாயும் பெற்றுள்ளனர். பின் போலி பணி ஆணை கொடுத்து மோசடி செய்துள்ளனர். இது குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கபாலி, 53, அவரது மனைவி செல்வி, 45 மோசடியில் ஈடுபட்ட து தெரிய வந்தது. இவர்கள், துாத்துக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி, 45 என்பவர் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருவதாகவும், அவர் மூலம் காவல் துறையில் வேலைவாங்கி தருவதாகவும் மோசடி செய்தது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட மூவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி நியமன ஆணைகள், காவல் எஸ்.ஐ., சீருடையில் எடுக்கப்பட்ட போலி புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.