உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராபிடோ ஓட்டுனரிடம் வழிப்பறி மாணவர் உட்பட 3 பேர் கைது

ராபிடோ ஓட்டுனரிடம் வழிப்பறி மாணவர் உட்பட 3 பேர் கைது

மாதவரம், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 22. சென்னை, திருமங்கலத்தில் தங்கி, 'ராபிடோ' எனும் ஆன்லைன் பைக் டாக்ஸி நிறுவனத்தில் இணைந்து பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார்.நேற்று அதிகாலை 2:00 மணியளவில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில், மாதவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் பின்தொடர்ந்த நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன், இரண்டு வெள்ளி மோதிரத்தை பறித்து தப்பினர். மாதவரம் போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார்.இந்நிலையில், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படி, சுற்றித்திரிந்த மூவரை மாதவரம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.இதில், சின்னமாத்துரைச் சேர்ந்த அருண்குமார், 21, மணலியைச் சேர்ந்த திலீப், 24, மாத்துாரைச் சேர்ந்த ஈஸ்வர், 21, என்பதும், ஸ்ரீனிவாசனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது இவர்கள் தான் என்பதும் தெரிந்தது.போலீசார், அவர்களிடம் இருந்து மொபைல் போன், கத்தி, வெள்ளி மோதிரம் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.இதில் திலீப், மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலையில் பி.டெக் படித்து வருகிறார். அருண்குமார், ஈஸ்வர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ