உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் 3 பேர் கைது

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் 3 பேர் கைது

விருகம்பாக்கம், : மசாஜ் நிலையத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில், தனியார் மசாஜ் நிலையம் உள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம், திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவது உறுதியானது. இதையடுத்து, கே.கே.,நகரைச் சேர்ந்த மசாஜ் நிலைய உரிமையாளர் சரவணன், 41, பள்ளிக்கரணையை சேர்ந்த மேலாளர் எஸ்.சரவணன், பிராட்வேயை சேர்ந்த கிஷோர்குமார், 25 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். 'ஸ்பா'வில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களையும், போலீசார் மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !