உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வட மாநில திருடர்கள் 3 பேர் கைது

வட மாநில திருடர்கள் 3 பேர் கைது

அமைந்தகரை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கைவரிசை காட்டி வந்த வடமாநில திருடர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அமைந்தகரை காய்கறி சந்தையில், தொடர்ந்து மொபைல் போன்கள் மற்றும் பணத்துடன் கைப்பைகள் திருடு போவதாக அமைந்தகரை போலீசாருக்கு புகார் வந்தது. இது குறித்து விசாரித்த போலீசார், திருவல்லிக்கேணியில் பதுங்கி இருந்த மூவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 29, நஜீர், 25, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து விசாரித்ததில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நெரிசலை பயன்படுத்தி, மொபைல் போன் மற்றும் கைப்பையை திருடுவதை வழக்கமாக வைத்துள்ளது தெரிய வந்தது. இதற்காகவே, வட மாநிலத்தில் இருந்து பல கும்பல் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி மற்ற கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை