உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்

ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்

மணலி,மணலி மண்டலம், 16வது வார்டு, சடையங்குப்பம் ஏரி அருகே, அனுமதியின்றி லாரிகளில் கழிவுகளை எடுத்து வந்து கொட்டி எரிப்பதால், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.புகாரை தொடர்ந்து, மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் தென்னவன், உதவி பொறியாளர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று காலை, அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, சடையங்குப்பம் ஏரி அருகே, மூன்று லாரிகளில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவது தெரியவந்தது. பின், அந்த லாரிகளை மடக்கி பிடித்து, ஓட்டுநர்களிடம் விசாரித்தனர்.அப்போது, ஐ.சி.எப்., நிறுவனத்தின் கழிவுகள் என, தெரியவந்தது. அதை, தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், இங்கு வந்து கொட்டிச் செல்வது தெரியவந்தது. ஏற்கனவே, 27ம் தேதியும், லாரிகளில் கொண்டு வந்து, கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.அதைத் தொடர்ந்து, 4,200 கிலோ கழிவுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ