உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடசென்னை ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்க வரும் 30 கடைசி

வடசென்னை ஐ.டி.ஐ.,யில் சேர விண்ணப்பிக்க வரும் 30 கடைசி

சென்னை, வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.வடசென்னை அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 30ம் தேதி வரை, நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமா படித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிரோன் பைலட் உள்ளிட்ட ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு பயிற்சிகள் உள்ளன.பயிற்சியின் போது, உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.பயிற்சியில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. விபரங்களுக்கு, 98941 92652, 94990 55653 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை