உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 326 கிலோ போதை பொருள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

326 கிலோ போதை பொருள் பறிமுதல்: ஐந்து பேர் கைது

சென்னை, கோட்டூர்புரம் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், 14ம் தேதி புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், சங்கர நாராயணன், 61 என்பவர், 13.6 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி, குட்கா சப்ளையில் ஈடுபட்டு வந்த, தேனாம்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி ஜெயக்குமார், 47, பீர் முஸ்ஸம்மில், 42, நிலாமுதீன், 43, ரசீத் அகமது, 37 ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 326 கிலோ குட்கா பொருட்கள், நான்கு மொபைல் போன்கள், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.எழும்பூர்எழும்பூர் போலீசார் ரோந்து சென்றபோது, புதுப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியில், சந்தேகப்படும்படியான நின்ற இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை ஒருவரை பிடித்தபோது அவரிடம், 1 கிலோ கஞ்சா, 278 போதை மத்திரைகள் இருந்தன.விசாரணையில், ராயப்பேட்டையை சேர்ந்த சசிகுமார், 34 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை