384 கிலோ கஞ்சா பறிமுதல்
தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில், இன்று (நவ.,14) நடத்தப்பட்ட சோதனையில், 384 கிலோ கஞ்சா, 2,226 கிலோ புகையிலைப் பொருட்கள், 160 மாத்திரைகள் மற்றும் மூன்று சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 15 வழக்குகளில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, தாம்பரம் ஆணையரக போலீசார் தெரிவித்துள்ளனர்.