மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
31-May-2025
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே, முத்துராஜ், 50, என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் வைத்திருந்த 7,000 ரூபாயை திருடிச் சென்றனர்.இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்தனர். இதில், சுனாமி நகரைச் சேர்ந்த சக்திவேல், 22, சூர்யா, 20, தமிழரசன், 23, அஜித்குமார், 27, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.திருடிய 7,000 ரூபாயில், 6,000 ரூபாய்க்கு கஞ்சா, போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதும் தெரியவந்தது. நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
31-May-2025