ரூ.4.2 கோடி தங்கம் கடத்திய 4 பேர் கைது
சென்னை, மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இரு தினங்களுக்கு முன், விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில், சுற்றுலா விசாவில் சென்று திரும்பிய இருவரின் உடைகளை, அதிகாரிகள் பரிசோதித்தபோது, சூட்கேஸ்களில் ரகசிய அறைகளில், 3 கிலோ தங்க கட்டிகளை மறைத்து, கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, 2.1 கோடி ரூபாய். அதேபோல், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சந்தேகத்திற்குரிய இரு பயணிகளின் சூட்கேஸ்களை சோதனை செய்தனர். அவற்றிலும் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட, 3 கிலோ தங்க கட்டிகளை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 2.1 கோடி ரூபாய். இது தொடர்பாக, நான்கு பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.