உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு புற்றுநோய் அப்பல்லோவில் சிகிச்சை

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு புற்றுநோய் அப்பல்லோவில் சிகிச்சை

சென்னை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெங்கட், பிரியா கபூர் ஆகியோர் கூறியதாவது: புற்றுநோய், 90 சதவீதம் மரபணுவால் வருவதில்லை. ஆனால், 10 சதவீத புற்றுநோய்கள் மரபணுவால் ஏற்படுகிறது. அசாம் மாநிலம் குவஹாத்தியில், ஒரே குடும்பத்தை ச் சேர்ந்த நான்கு பேருக்கு மரபணு தொடர்பான புற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முதலில், தாய்க்கு, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டது. பின், இரண்டு மகள்கள், மகன் உள்ளிடோருக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. அந்த நான்கு பேரும் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வாயிலாக குணப்படுத்தப்பட்டனர். குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் பாதித்தால், அக்குடும்பத்தைச் சேர்ந்தோர் 25 வயதுக்கு பின், புற்று நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை