உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணம் பறிப்பு  சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

பணம் பறிப்பு  சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

திருவான்மியூர், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ், 34; கூலி தொழிலாளி. கடந்த 9ம் தேதி இரவு, திருவான்மியூர், நியூ கடற்கரை அருகே நின்று கொண்டிருந்தார். அங்கே வந்த நான்கு பேர், ரிஷிகேைஷ தாக்கி 500 ரூபாய் பறித்தனர்.திருவான்மியூர் போலீசார் விசாரணையில், திருவான்மியூர், குப்பம் பகுதியைச் சேர்ந்த ரூபன், 18 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் என தெரிந்தது.அவர்களை பிடித்த போலீசார், நேற்று ரூபனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூன்று சிறுவர்களை, சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தி, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி