மேலும் செய்திகள்
வழிப்பறி வாலிபர் கைது
19-Aug-2025
கொரட்டூர், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை, கொரட்டூர் போலீசார் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். கொரட்டூர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சுசீந்திரன், 53. இவர், வீட்டின் கீழ் தளத்தில், பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தைக்கு சென்று வாங்கிவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். பாடி, இளங்கோ நகர் பூங்கா அருகே, இயற்கை உபாதைக்காக நின்றிருந்த சுசீந்தரனை, சுற்றிவளைத்த போதை வாலிபர்கள் நான்கு பேர், சுசீந்திரனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 1,100 ரூபாயை பறித்து தப்பினர். தடுக்க முயன்ற பொதுமக்கள் மீது கல்லை வீசி தாக்குதல் நடத்தி சென்றனர். சுசீந்திரன் அளித்த புகாரின்படி, கொரட்டூர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உதயநிதி, 20, யுவராஜ், 19, ஜெகதீஷ், 19, கோயம்பேடு, நெற்குன்றத்தைச் சேர்ந்த தாஸ், 19, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
19-Aug-2025