மேலும் செய்திகள்
தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை
25-Apr-2025
தாம்பரம் :அடுத்த முடிச்சூர், லிங்கம் நகர், குருகிருபா குடியிருப்பில் வசிப்பவர் பாலாஜி, 42; படப்பை அடுத்த, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.நேற்று காலை 7:30 மணிக்கு, பணிக்கு சென்றார். இவரது மனைவி மகேஸ்வரி, காலை, 8:30 மணிக்கு, தன் பிள்ளைக்கு எழுத்து பயிற்சி கொடுப்பதற்காக, பெருங்களத்துாரில் உள்ள டியூசன் மையத்திற்கு அழைத்து சென்றார்.மதியம் 12:30 மணிக்கு வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே, பீரோவில் இருந்த 40 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.பீரோவை உடைக்காமல், சாவியால் பீரோவை திறந்து திருட்டு நடந்திருப்பதால், பாலாஜி குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் என, பீர்க்கன்காரணை போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகையை பதிவு செய்தனர்.
25-Apr-2025