உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 41 ரவுடிகளுக்கு சிறை தண்டனை

41 ரவுடிகளுக்கு சிறை தண்டனை

சென்னை, சென்னையில், நான்கு மாதங்களில், 41 ரவுடிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் என, 53 பேருக்கு, போலீசார் சிறை தண்டனை பெற்று தந்துள்ளனர்.ரவுடிகள் மற்றும் கூலிப்படையினர் உள்ளிட்டோர் மீது, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அவர்கள், சென்னையில், கடந்த 2024, செப்., - டிச., வரை நான்கு மாதங்களில், ரவுடிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். விசாரணைக்கு தேவையான அனைத்து விபரங்களையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் தாக்கல் செய்து, 41 ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள், 12 பேர் என, மொத்தம், 53 பேருக்கு சிறை தண்டனை பெற்று தந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ