நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கல்லுாரி கேம்பஸ் இன்டர்வியூவில் 440 பேர் தேர்வு
சென்னை, மே 21-மேடவாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சமீபத்தில் வளாக நேர்காணல் நடந்தது.நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமையில் நடந்த வளாக நேர்க்காணலில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ மோவெட் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், ஹெக்ஸாவேர், அவா சாப்ட், காக்னிசன்ட் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 440 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை, மோவேட் டெக்னாலஜிஸ் நிறுவன மூத்த இணை இயக்குனர் பத்மா ஜெயராமன் வழங்கினார்.அவர் பேசுகையில், ''பணி வாய்ப்பு வாழ்வின் முதல்படி மட்டும் தான். அடுத்தடுத்த படிக்கட்டுகளில் ஏற, தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணியில் கிடைக்கும் அனுபவங்களை, முன்னேற்றத்திற்கானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், நியூ பிரின்ஸ் கல்வி குழும துணைத் தலைவர்கள் எல்.நவீன் பிரசாத், எல்.அர்ச்சனா, செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, நிர்வாக இயக்குனர் மு.பிரபாகரன், இயக்குனர் வே.கருணாநிதி, கல்லுாரி முதல்வர் வெ.உமாதேவி. மாணவர்கள் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளின் இயக்குனர் கே.மணிகண்டன், பயிற்சியாளர் ஏஞ்சலின் ஆகியோர் பங்கேற்றனர்.