மேலும் செய்திகள்
பெண் போலீஸ் வீட்டில் தீ விபத்து
28-Dec-2024
Anil kumble சாதனையை தாண்டிய Nitish kumar reddy
28-Dec-2024
பம்மல், பம்மலைச் சேர்ந்தவர் முகமது முபின். பம்மல், நாகல்கேணி, எம்.ஜி.ஆர்., தெருவில், டிங்கரிங் ஷெட் நடத்தி வருகிறார். இவரது கடையில், பெயின்டிங் மற்றும் பழுது பார்ப்பதற்காக, ஐந்து கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. சற்று நேரத்தில் மளமளவென பரவி, கடையில் நிறுத்தப்பட்டிருந்த 'மாருதி ஷிப்ட், ஜாஸ், இண்டிகா, கெட்ஸ்' உள்ளிட்ட ஐந்து கார்கள் தீப்பிடித்து எரிந்தன. தாம்பரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து, தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Dec-2024
28-Dec-2024