மேலும் செய்திகள்
ஆவடியில் 6 இன்ஸ்., இடமாற்றம்
05-Dec-2025
ஆவடி: அம்பத்துார் சி.டி.எச்., சாலை மற்றும் அம்பத்துார் - செங்குன்றம் நெடுஞ்சாலையில், சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட, 'யு - டர்ன்' முறைக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், பாடி சந்திப்பில், சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது குறித்தும் புகார் எழுந்தது. அதனால், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், பாடி சந்திப்பில் ஆய்வு செய்தார். இந்நிலையில், அம்பத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமனை, மணலிக்கு பணியிட மாற்றம் செய்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதேபோல், பட்டாபிராம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், அம்பத்துாருக்கும், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், பட்டாபிராமுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல், செங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எழிலன், ஆயுதப்படைக்கும், மணலி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், செங்குன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
05-Dec-2025