பீனிக்ஸ் மாலில் ரூ.60 லட்சம் மதிப்பு 5 வாட்ச் திருட்டு
சென்னை; வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள கடையில், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து கைக்கடிகாரங்கள் திருடப்பட்டன. சென்னை வேளச்சேரியில் பீனிக்ஸ் மால் உள்ளது. இங்குள்ள, 'ஒமேகா' எனும் கைக் கடிகாரங்கள் விற்பனை கடையில், கண்ணாடி பெட்டிக்குள் இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து கைக்கடிகாரங்கள், நேற்று முன்தினம் திருடப்பட்டன. கடையின் மேலாளர், கிண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்படி, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருந்தபோது, ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பிய மர்ம நபர், கள்ளச்சாவி பயன்படுத்தி, கண்ணாடி பெட்டியை திறந்து கைக்கடிகாரத்தை திருடிச்செல்வது தெரிந்தது. மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.