உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழநியில் ரூ.500 கோடியில் முதல் கூட்டுறவு வணிக வளாகம் 

வடபழநியில் ரூ.500 கோடியில் முதல் கூட்டுறவு வணிக வளாகம் 

சென்னை:சென்னை வடபழநியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில், 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டி, வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு பண்டக சாலைகளும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகம் போன்றவற்றை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்தமாக காலியிடங்கள் உள்ளன. அவற்றை, கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து உள்ளனர். இதை தடுக்கும் வகையில், காலியிடத்தில் திருமண மண்டபம் கட்டி, வாடகை விடும் பணியில் கூட்டுறவு துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னை மயிலாப்பூரில், இரு கூட்டுறவு மண்டபங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. சென்னை வடபழநியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமாக, 2 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. அங்கு, 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டி, அங்கு தனியார் கடை நடத்த வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் பெறுவதற்கான பணிகளில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை