கொள்ளை வழக்கு 6 பேர் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை, கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு, 66. கடந்த 26ம் தேதி இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 71 சவரன் நகைகள் மற்றும் 70,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.திருத்தணி போலீசார், கொண்டாபுரத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, 32, தினேஷ், 23, வேலு, 35, பூபதி, 24, ஆகியோரை கைது செய்து, 34 சவரன் நகை மற்றும் 8.75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். திருட்டு நகையை வாங்கியது மற்றும் விற்க உதவியதற்காக வாசு மற்றும் சுபாவையும் போலீசார் கைது செய்தனர்.