மேலும் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் பலி
13-Feb-2025
திருத்தணி: ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 27; அவரது உறவினர் மகள் சுஷ்மிதா, 23. இவர்களுக்கு நேற்று காலை, திருப்பதியில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.இரு வீட்டாரின் உறவினர்களுடன் புதுமண தம்பதி, திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, மீண்டும் திருப்பதி நோக்கி, 'ஸ்கார்பியோ' காரில் சென்று கொண்டிருந்தனர்.சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, தரணிவராகபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, புதுமாப்பிள்ளை சுரேஷ் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர் திசையில் வந்த இரண்டு கார்களின் மீது லேசாக உரசி, மூன்றாவதாக வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் புதுமண தம்பதி, அவரது உறவினர்கள் நான்கு பேர் காயமடைந்தனர்.அதேபோல், எதிர்திசையில் காரில் வந்த சென்னை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த சேகர்பாசு, சபர்ணபாசு ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரையும், அங்கிருந்தோர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Feb-2025