உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கை , தாம்பரம் தடத்தில் மீண்டும் 6 ரயில்கள் இயக்கம்

செங்கை , தாம்பரம் தடத்தில் மீண்டும் 6 ரயில்கள் இயக்கம்

சென்னை: 'செங்கல்பட்டு, தாம்பரம் தடத்தில், மீண்டும் ஆறு மின்சார ரயில்களின் சேவை நாளை முதல் துவக்கப்படும்' என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு மின்சார ரயில்களின் சேவை மறு அறிவிப்பு இன்றி, கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, பராமரிப்பு முடிந்திருப்பதாலும், பயணியர் தேவையை கருத்தில் வைத்தும், மீண்டும் அந்த ஆறு ரயில்களின் சேவை நாளை முதல் துவக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரம் - கடற்கரை காலை 11:00, கடற்கரை - தாம்பரம் காலை 11:52, பகல் 12:02, 12:15, செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு காலை 9:50, கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:28 மணிக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ