உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் பாலியல் சீண்டல் 66 வயதுக்காரருக்கு போக்சோ

சிறுமியிடம் பாலியல் சீண்டல் 66 வயதுக்காரருக்கு போக்சோ

சென்னை: அரசு மாநகர பேருந்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, 66 வயதானவரை போக்சோ சட்டத்தில், போலீசார் நேற்று கைது செய்தனர். கிளாம்பாக்கம் - பாரிமுனை செல்லும் வழித்தடம் எண், '21 ஜி' பேருந்து, நேற்று முன்தினம் காலை, சர்தார் பட்டேல் சாலை வழியாக சென்றது. பேருந்தில் பயணித்த, 17 வயது சிறுமியிடம், 66 வயதானவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, காலணியை கழற்றி அவரை சரமாரியாக அடித்து, அண்ணா பல்கலை பஸ் நிறுத்தத்தில் இறக்கினார். அங்கு, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கோட்டூர்புரம் போலீசாரிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை, சிறுமி பிடித்து கொடுத்தார். விசாரணையில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்த மோகன், 66, என்பது தெரியவந்தது. போக்சோ சட்டத்தில் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை