கொத்தடிமையாக வேலை செய்த 7 சிறுவர்கள் மீட்பு
சென்னை, நகை பட்டறையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த, ஏழு சிறுவர்களை போலீசார் மீட்டனர்; நகைப்பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சரிபுல் ஹாக், 25. இவர், சென்னை சூளை சட்டண்ணன் தெருவில், எஸ்.எச்.ஜூவல்லர்ஸ் என்ற பெயரில், தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு, சிறார்கள் கொத்தடிமையாக வேலை செய்வதாக, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அத்துறையின் துணை இயக்குனர் இளவரசன், நவ, 29ல், நகை பட்டறையில் ஆய்வு செய்தார்.அப்போது, கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏழு சிறுவர்களை போலீசார் மீட்டு, ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, நகை பட்டறை உரிமையாளரை கைது செய்தனர்.