ரூ.7 கோடியில் பல வசதிகளுடன் விளையாட்டு திடல்
சூளை, பெரியமேடு, சூளையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண்ணப்பர் திடல் பகுதியில், விளையாட்டு திடல் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், 7 கோடி ரூபாய் செலவில், 5 ஏக்கர் பரப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், விளையாட்டு திடல் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதில், பூப்பந்தாட்டம், கூடைப்பந்து, வாலிபால், ஸ்கேட்டிங், ஓடுதளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதில், 600 சதுர அடியில், நவீன உடற்பயிற்சி கூடம், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் பிரத்யேகமாக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.