உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

வில்லிவாக்கம்: தேவி பாலியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில், 745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற தேவி பாலியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா தொடங்கியது. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டு, பக்தி பரவசத்துடன் 745 பேர் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை