750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம், நான்காம் நடைமேடையில், ரயில்வே சப் - இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், பெண் தலைமை காவலர் தமிழ்வாணி, காவலர் டில்லிபாபு உள்ளிட்டோர், நேற்று முன்தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ரயில்வே நடைமேடையில் உள்ள இருக்கையின் கீழ், கேட்பாரற்று மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்துள்ளது.அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், பட்டரவாக்கம் உணவு வழங்கல் சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் எடை, 750 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.