உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதியிலே பள்ளி படிப்பை நிறுத்திய 772 மாணவர்கள் மீண்டும் சேர்ப்பு

பாதியிலே பள்ளி படிப்பை நிறுத்திய 772 மாணவர்கள் மீண்டும் சேர்ப்பு

சென்னை: பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்களில், 772 பேரை பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாநகராட்சி சேர்த்துள்ளது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், பள்ளிக்கு செல்லாத மாற்றுத்திறன் மற்றும் சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்யும் கூட்டம், இணை கமிஷனர் கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து, மாநகராட்சி இணை கமிஷனர் கற்பகம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத, 7,302 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 2,106 குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் பேசியுள்ளோம். முதற்கட்டமாக, பள்ளிகளில் 509 பேர், தொழிற்பயிற்சி நிலையங்கள் 263 பேர் என, 772 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு, அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளியில் இடைநிற்றலை தவிர்க்க, அவர்களது பெற்றோருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இடைநிற்றலில் ஈடுபட்டவர்களை பள்ளி அல்லது தொழிற்யிற்சி நிலையங்களில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்