டாஸ்மாக்கில் முதல்வர் படம் பா.ஜ.,வினர் 8 பேர் கைது
நங்கநல்லுார், மார்ச் 26-தமிழகம் முழுதும் பா.ஜ., மகளிர் அணியினர் டாஸ்மாக் கடையின் முன் முதல்வர் படத்தை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை, நங்கநல்லுார் டாஸ்மாக் கடையில், பா.ஜ.,வை சேர்ந்த மீனாட்சி, 57, தங்க சோபனா, 44, வேதகிரி, 65, வினோத்குமார், 36, ராஜேஷ், 41, செல்வம், 40, ஜெயகுமார், 45, வெங்கடேஷ், 42, ஆகியோர், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் படத்தை ஒட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, எட்டு பேர் மீதும் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின், பெரும்பாக்கத்தில் உள்ள ஆலந்துார் ஜெ.எம்., - 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களில் மீனாட்சி, தங்க சோபானா, வேதகிரி ஆகியோர் ஜாமினில் வெளிவந்தனர். மற்ற ஐந்து பேரையும், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, அவர்கள் சைதாபேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.