உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

8 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை,திருச்சி ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சென்னை - புதுச்சேரி உட்பட எட்டு விரைவு ரயில்கள் உட்பட, சில ரயில்களின் சேவையில் வரும், 9, 16ம் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.★ சென்னை தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், விக்கிரவாண்டி வரை மட்டுமே செல்லும்★ எழும்பூர் - புதுச்சேரி காலை 6:35 மணி ரயில், விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் ★ விழுப்புரம் - சென்னை கடற்கரை, மதியம் 1:40 மணி ரயில், விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்★ விழுப்புரம் - மயிலாடுதுறை மதியம் 2:35 மணி ரயில், சேர்ந்தனுாரில் இருந்து இயக்கப்படும் ★ புதுச்சேரி - திருப்பதி மாலை 3:00 மணி ரயில், முண்டியம்பாக்கத்தில் புறப்படும் ★ எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக செல்லும்★ புதுச்சேரி - ஹவுரா மதியம் 2:15 மணி ரயில், 50 நிமிடங்கள் தாமதமாக கிளம்பும்★ திருச்சி - எழும்பூர் சோழன் விரைவு ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !