விடுதியிலிருந்து தப்பி சென்னை வந்த துாத்துக்குடி மாணவர்கள் 8 பேர் மீட்பு
சேலையூதுாத்துக்குடி மாவட்டத்தில், விடுதி வார்டன் கொடுமைப்படுத்துவதாக கூறி, ரயில் ஏறி தாம்பரம் வந்த எட்டு மாணவர்களை, சேலையூர் போலீசார் மீட்டு, பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி விடுதியில் தங்கி, 10, பிளஸ் 1 படிக்கும் எட்டு மாணவர்கள், விடுதி பொறுப்பாளர் கொடுமைப்படுத்துகிறார்; விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என, நேற்று முன்தினம், கோவில்பட்டியில் இருந்து ரயில் வழியாக தாம்பரத்திற்கு வந்தனர்.நேற்று காலை, எட்டு பேரும், தாம்பரம் - வேளச்சேரி சாலை, சேலையூர் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றிக் கொண்டிருந்தனர்.அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், மாணவர்களை பிடித்து விசாரித்ததில், விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லாததால், ரயில் ஏறி தாம்பரம் வந்து, வேலை தேடியது தெரியவந்தது. அந்த மாணவர்களை, சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, சேலையூர் போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். துாத்துக்குடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளோம். அவர்கள் வந்ததும், மாணவர்கள் எட்டு பேரும் ஒப்படைக்கப்படுவர்.