உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டாசு வெடித்ததில்  89 பேர் தீக்காயம் கீழ்ப்பாக்கத்தில் 6 குழந்தைகள் அட்மிட்  அமைச்சர் தகவல்

பட்டாசு வெடித்ததில்  89 பேர் தீக்காயம் கீழ்ப்பாக்கத்தில் 6 குழந்தைகள் அட்மிட்  அமைச்சர் தகவல்

சென்னை: ''தீபாவளிக்காக பட்டாசு வெடித்ததில், பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 89 பேர் தீக்காயமடைந்துள்ளனர்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீக்காய சிறப்பு பிரிவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாநிலம் முழுதும், தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில், 89 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 41 பேர் வீடு திரும்பிய நிலையில், 48 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 40 பேருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஒரு பெண் மற்றும் ஆறு குழந்தைகள் தீக்காய சிகிச்சையில் உள்ளனர். யாருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை. கடந்த முறை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில், மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ