உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  9 நகரங்களில் வெயில் சதம்

 9 நகரங்களில் வெயில் சதம்

சென்னை;சென்னை உட்பட ஒன்பது நகரங்களில், நேற்று 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, கரூர், வேலுார் ஆகிய இடங்களில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடில், 103 டிகிரி பாரன்ஹீட், வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருப்பத்துார், திருச்சி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !