சாலையில் உலா 9 மாடுகள் பறிமுதல்
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி ஒன்பது மாடுகள் பறிமுதல் செய்யப் பட்டன. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், பல்லாவரம் பான்ட்ஸ் சிக்னல், தர்கா சாலை, கீழ்க்கட்டளை ஆகிய இடங்களில், சாலையில் சுற்றித்திரிந்த ஒன்பது மாடுகளை, சுகாதார அதிகாரிகள் நேற்று பிடித்தனர்; பின், அவற்றை வாகனங்களில் ஏற்றி, வாலாஜாபாதை அடுத்த களக்காட்டூர் கோசாலையில் அடைத்தனர்.