உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரியமேடில் அடுத்தடுத்து 9 கடைகளின் பூட்டு உடைப்பு நள்ளிரவில் துணிகரம்

பெரியமேடில் அடுத்தடுத்து 9 கடைகளின் பூட்டு உடைப்பு நள்ளிரவில் துணிகரம்

சென்னை:வியாசர்பாடி, எம்.கே.பி., நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்லால் சர்மா, 58. இவர், சூளை டி.கே., முதலி தெருவில் பிளைவுட் கடை நடத்தி வருகிறார்.இவர், நேற்று காலை கடை திறப்பதற்காக வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த 25,000 ரூபாயை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.அதேபோல, ஒன்பது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு கடைகளில் 15,000 ரூபாயும், மற்ற ஆறு கடைகளில் கொள்ளை முயற்சியும் நடந்திருப்பது தெரியவந்தது.இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில், மர்மநபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை