உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகி நகரில் 90 பெண்களுக்கு ரத்தசோகை

கண்ணகி நகரில் 90 பெண்களுக்கு ரத்தசோகை

கண்ணகி நகர், கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையம் சார்பில், பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை நடந்தது. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட, 115 பேர் பங்கேற்றனர்.இதில், 90 பேருக்கு ரத்தசோகை பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, 12 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும்.பாதிப்பில் உள்ள, 90 சதவீதம் பேருக்கு, 8 முதல் 10 சதவீதம் வரை இருந்தது. இரண்டு பேருக்கு, 7 சதவீதம் இருந்தது.அவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கி, சத்தான உணவு சாப்பிட வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், ரத்த அழுத்தம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, குடும்பச் சூழலால் ஏற்பட்ட பாதிப்பில் பல பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு மனநல ஆலோசனையும், தேவைப்படுவோருக்கு மருந்தும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை