உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 61 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை

61 வயது முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை

சென்னை:சென்னை ஜிம்ஸ் மருத்துவமனையில், இதய பெருந்தமனி பாதிப்புக்குள்ளான முதியவருக்கு, ஒருங்கிணைந்த அதிநவீன வால்வு மாற்று சிகிச்சை மற்றும் சீரமைப்பு சிகிச்சை அளித்து, டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.இதுகுறித்து, ஜிம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் மற்றும் பெருந்தமனி சிகிச்சை துறை இயக்குனர் வி.வி.பாஷி கூறியதாவது:மும்பையைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கு, 11 ஆண்டுகளுக்கு முன், 'பென்டல்' என்ற இதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. மாற்றப்பட்ட இதய வால்வானது சிதைந்து பாதிக்கப்பட்டது. வால்வின் சில இடங்களில் அடைப்பு மற்றும் கால்சியம் படிமம் படிந்திருந்தது.இவற்றை சீரமைக்க வேண்டிய நிலை இருந்தது. சிக்கலான பிரச்னையை, ஜிம்ஸ் மருத்துவ குழுவினர், 10 மணி நேர தொடர் அறுவை சிகிச்சையில் சரி செய்துள்ளனர்.முதலில் சுருக்கமடைந்திருந்த வால்வை எப்.இ.டி., நுட்பத்தில் ஸ்டென்ட் பொருத்தி விரிவாக்கி, அதன்பின், பாதிக்கப்பட்ட வால்வை மாற்றினர். தொடர்ந்து சீரமைப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.இதற்காக, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள், நான்கு மணி நேரத்துக்கு இயல்பு மாறாக மாற்றியமைக்கப்பட்டன. அப்போது, இதய செயல்பாடு, இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தொழில்நுட்ப கருவி வழியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மிக நுட்பமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய வால்வு சீரமைத்து மாற்றப்பட்டது. இதன் பயனாக நோயாளி குணமடைந்து, எட்டு நாட்களில் வீடு திரும்பினார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை