வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாமியோவ்..இந்த மாதிரி தினசரி பீச் ஸ்டேஷன் வரை சிறுவர்கள் செய்கிறார்கள்.. ரீல்ஸை அகற்றுவதால் மட்டுமே இதை தடுத்து விட முடியாது..
மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
ஆவடி, 'ரீல்ஸ்' வீடியோ மோகத்தில், ரயில் படிக்கட்டில் ஆபத்தான வகையில் இளைஞர்கள் சாகசம் மேற்கொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆவடி, இந்து கல்லுாரி, அண்ணனுார் உள்ளிட்ட புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கும் இளைஞர்களில் சிலர், பிரபலம் அடைவதற்காக, விபரீத சாகசங்களில் ஈடுபட்டு 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ போடுகின்றனர்.அந்த வகையில், ஆவடியில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் இளைஞர்கள் சிலர், ஆபத்தான வகையில், கால்களை நடைமேடையில் தேய்த்தபடி செல்லும் வீடியோ, வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ரயில்வே போலீசாரிடம் கேட்ட போது, 'சமீப காலங்களில் இது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, சமூக வலைதளங்களில் வெளியானது பழைய வீடியோ' என தெரிவித்தனர்.
சாமியோவ்..இந்த மாதிரி தினசரி பீச் ஸ்டேஷன் வரை சிறுவர்கள் செய்கிறார்கள்.. ரீல்ஸை அகற்றுவதால் மட்டுமே இதை தடுத்து விட முடியாது..
24-Jun-2025