உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மறுமண ஆசை காட்டி மோசடி போலீஸ்காரர் மீது வழக்கு

மறுமண ஆசை காட்டி மோசடி போலீஸ்காரர் மீது வழக்கு

சென்னை, விவாகரத்தான பெண்ணுக்கு மறுமண ஆசைக்காட்டி, நகை, பணம் பறித்தது தொடர்பாக, போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மணலியைச் சேர்ந்த, 38 வயது பெண், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவொற்றியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:நான் விவாகரத்தாகி குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும், போலீஸ்காரர் செல்லதுரை என்னுடன் நட்பாக பழகி வந்தார்.அவர், எனக்கும் விவாகரத்தாகிவிட்டது; உன்னை மறுமணம் செய்து கொள்கிறேன் என, ஆசை காட்டினார். அவரை நம்பி, நாங்கள் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.அவர், என்னிடம், 10 லட்சம் ரூபாய், 25,000 ரூபாய்க்கு மொபைல் போன், 1.5 சவரன் நகை வாங்கினார். என்னை மறுமணம் செய்ய காலம் தாழ்த்தி வந்ததால், அவரை பற்றி விசாரித்தேன். அவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கிறார். என்னைப் போல பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், என் அந்தரங்க படத்தை எடுத்து மிரட்டியும் பணம் பறித்து வந்தார். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து விசாரிக்கும் மணலி போலீசார், போலீஸ்காரர் செல்லதுரை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை