உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் சவால் விட்டு நீச்சலடித்தவர் உயிரிழப்பு

போதையில் சவால் விட்டு நீச்சலடித்தவர் உயிரிழப்பு

கொளத்துார், வில்லிவாக்கம், தாதாங்குப்பம் பகுதியில் உள்ள குளத்தின் எதிரே உள்ள ஒரு வீட்டில், இறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மேளம் அடிக்க, அயனாவரத்தைச் சேர்ந்த பிரசாந்த், 27, உள்ளிட்ட ஆறு பேர் சென்றுள்ளனர்.இறுதி ஊர்வல வேலைகளை முடித்த நிலையில், மீண்டும் குளத்தின் அருகே வந்த பிரசாந்த் உள்ளிட்டோர், மது அருந்திஉள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில், 'குளத்தில் இந்த கரையில் குதித்து, நீச்சலடித்தே மறு கரைக்கு செல்கிறேன்' என, நண்பர்களிடம் சவால் விட்ட பிரசாந்த், குளத்தில் குதித்த நிலையில் சற்று நேரத்தில் மாயமானார்.அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்களின் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பின் மாலையில், பிரசாந்த் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ