டெலிவரி ஊழியரிடம் பொருளை ஆட்டை போட்டு கும்பல் ஓட்டம்
கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 6வது பிளாக், இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜெயராம், 28. இவர், கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் உள்ள 'பிகோ எக்ஸ்பிரஸ்' எனும் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், நேற்று மோனி என்ற பெயரில் அழகுசாதன பொருட்கள் 'ஆர்டர்' வந்துள்ளது. இதை, டெலிவரி செய்வதற்காக, வாடிக்கையாளரை ஜெயராம் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அந்த நபர் சண்முகா தியேட்டர், பிஸ்கட் கம்பெனி அருகில் வருமாறு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஜெயராம் அங்கு டெலிவரி செய்ய சென்றபோது, அங்கிருந்த மூவர், 14,126 ரூபாய் மதிப்பிலான அழகுசாதன பொருள்கள் வந்த பார்சலை பெற்று கொண்டு, பணம் தராமல் தப்பியோடினர்.இது குறித்து ஜெயராம் கொடுங்கையூர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.