மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மேஸ்திரி பலி
12-Oct-2024
கோயம்பேடு, மணலியைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 31. இவர், அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், காய்கறிகள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு பைக்கில் சென்றார்.காய்கறிகள் வாங்கி, கோயம்பேடு சந்தை - பி சாலை வழியாக சென்றார். அப்போது, கோயம்பேடு சந்தையில் தக்காளி லோடு இறக்கிவிட்டு சென்ற லாரி, சரண்ராஜ் பைக் மீது மோதியது.இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சரண்ராஜின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சரண்ராஜ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் ராஜ்குமார், 45, என்பவரை கைது செய்தனர்.
12-Oct-2024