உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை நீதிமன்றத்தில் மறித்து முற்றுகை

சீட்டு மோசடியில் ஈடுபட்டவரை நீதிமன்றத்தில் மறித்து முற்றுகை

திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி ரேவதி 50. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன் வாசுதேவன் உயிரிழந்தார். இவருடைய மகள், மகன் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தன்னிடம் சீட்டு கட்டிய நபர்களுக்கு தரவேண்டிய, 5 கோடி ரூபாயை கொடுக்காமல், ரேவதி தலைமறைவானார்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ரேவதி ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், 'பிடிவாரண்ட்' பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று இந்த வழக்கில் ஆஜராவதற்காக, ரேவதி திருத்தணி நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து, சீட்டு கட்டி ஏமாந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், நீதிமன்ற வளாகத்தில் ரேவதியை மறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு சில பெண்கள் ரேவதியை தாக்கினர். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், ரேவதியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை