உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது பாட்டிலால் தனக்கு தானே வயிற்றில் குத்தியவரால் பரபரப்பு

மது பாட்டிலால் தனக்கு தானே வயிற்றில் குத்தியவரால் பரபரப்பு

அண்ணா நகர், தன் மகனை பார்க்கவிடாத ஆத்திரத்தில், மதுபாட்டிலால் தனக்கு தானே வயிற்றில் ஆறு முறை குத்திய நபரால் சலசலப்பை ஏற்பட்டது.கோயம்பேடு, நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்த ஆகாஷ், 28. இவரது மனைவி சங்கீதா, 25. தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளான். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சங்கீதா, 10 நாட்களாக அயனாவரத்தில் உள்ள தயார் வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு, அயனவரத்தில் உள்ள மனைவியையும், குழந்தையும் பார்க்க ஆகாஷ் சென்றுள்ளார். அப்போது, குழந்தையை பார்க்கவிடாமல் குடும்பத்தினர் தடுத்தாக கூறப்படுகிறது. இதனால், அத்திரமடைந்த ஆகாஷ், கிழக்கு அண்ணா நகர், இரண்டாவது பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். பின், வெளியில் வந்தவர் திடீரென சாலையில் கிடந்த மதுபாட்டிலை உடைத்து, தனக்கு தானே ஆறு முறை வயிற்றி குத்திக்கொண்டார். போலீசார், ரத்த காயடைத்துடன் இருந்த ஆகாஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை