உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரிகளுக்கான நவீன கடை பூந்தமல்லியில் வீணாகும் அவலம்

வியாபாரிகளுக்கான நவீன கடை பூந்தமல்லியில் வீணாகும் அவலம்

பூந்தமல்லி, சென்னை அருகே பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு 300க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இந்நிலையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பூந்தமல்லி நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, இலவசமாக நவீன கடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, 'ரெடிமேடாக' நவீன கடைகள் தயாரிக்கப்பட்டன. அவை, பயனாளிகளுக்கு வழங்காமல், நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.இவை மழை, வெயிலில் நனைந்து வீணாகி வருகின்றன. இந்த நவீன கடைகளை பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை