மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை ரோடு புதுப்பிக்க அனுமதி
30-Jul-2025
தாம்பரம், வண்டலுார் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் நீர்யானை ஒன்று, ஜூலை, 30ம் தேதி, ஆண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆறு பெண், இரண்டு ஆண் என, எட்டு நீர்யானைகள் உள்ளன. இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெண் நீர்யானை ஒன்று, 8 மாத கர்ப்பத்திற்கு பின், ஜூலை 30ல், ஆண் குட்டியை ஈன்றது. கடந்தாண்டு ஆகஸ்டில், பிரகுர்த்தி என்ற நீர்யானை குட்டியை ஈன்றது. அதுபற்றிய புகைப்படமும் வெளியிடப்பட்டது. அமைச்சரும் வந்து பார்வையிட்டார். திடீரென பிறந்த எட்டு நாட்களில் குட்டி இறந்தது. அதுபோன்ற நிகழ்வு நடக்காத வகையிலும், தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதை பூங்கா நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. ஒரு மாதம் கழித்து நீர்யானை குட்டியின் புகைப்படம் வெளியிடப்படும் என, பூங்கா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30-Jul-2025